Posts

மோகம்

 அவள் சென்ற இடமெல்லாம் அரும்புகள் பூக்களாய் மலர்ந்தன. அவள் மேலிருந்த வாசனை திரவியத்தின் மோகத்தால். நானும் ஏங்கினேன் அவளின் மணத்தை சுவாசிக்க ஓர் மலராய். 

பார்த்த நியாபகம் இல்லையோ

பார்த்த நியாபகம் இல்லையோ நினைவுகள் ஒரு தொல்லையோ . நீ அங்கு இருக்க நானும் இங்கு இருக்க நாம் பழகிட தேவையோ ஒரு அலைபேசி . நினைவுகள் பலவும் உண்டு பெண்ணே நீயும் உனது கைப்பேசியை கேட்டுப்பார்  அதுவும் கூடச்சொல்லும் என்னை பற்றி . இரவுகள் பலவும் கழிந்தன அன்பே உன்னுடன் உரையாடிய பொழுதில் அந்த இரவை கேள்  கூறும் அதனின் சுவையை.                                          என்னவோ எனைமறந்து அங்கு சென்றாய் இடைவெளி ஒரு பெரிய மதிலாய் மாறித்தான் போயின . மறந்ததோ ஏன் நெஞ்சமே ?  பழகிய காலங்கள் கொஞ்சமே ஆனாலும் அது போதும் இந்த ஜென்மத்தில். உன் மனதை கேள் நாம் இணைந்து வாழ மறுபடி பிறந்திட சொல்லும். பருவம் எனும் நாடகத்தில் ஒரு கதையாய் வந்து பல நினைவுகளை தந்து சென்றாய் பெண்ணே இப்பூவுலகை யான் கழிக்க.                                         இதயத்தில் ஏற்பட்ட காயத்துக்கு போகும் வழியில் மருந்து ஒன்...

First Impression With First Love

                               when you see a girl for the first time, you will have an enormous feeling which is the reflection of your inner affection & that's how I felt when, I saw you for the first time. It's a beautiful feeling which one get only once, in his life span. It's mixed up with everything you need in one's life.                                The impression of external beauty would reflect the inner beauty as well. For a moment my soul have said that to me as , yes she is the one who's made for you & you should have her by your side till the god of death do yours apart.                                 I wanna say this to you my love , will you be my better half till the end of the world which exist's within us ?   ...

என்னுள் அவள்

யார் யாரென தெரிந்தும் , தெரியாமல் பல நாட்கள் கடந்தோடின உன்னைக்கண்டும் காணாமல் நான். உறவின் பிணைப்பினால் உருவான புதிய உறவின் பெயர் கூடத்தெரியாமல் நான் . முதல் சந்திப்பில் பேச முயன்றும் முடியாமல் , மறுசந்திப்பிற்க்காக தாயின் வருகைக்கு கண் மூடாமல் காத்துக்கிடக்கும் குழந்தை போல காந்திருந்தேன் நானும் . இயற்கையாய் அமைந்த ஒரு வாய்ப்பு இன்று நம்மிடம் இருக்கும் நட்பிற்கு விதையாய் . இலேசாய் தொடங்கிய அரட்டைகள் ஊற்று நீர் போல இன்றும் தொடர, நம் நட்பிற்கு (அன்பிற்கு ) காதலும் இணையாகுமோ என்ற எண்ணம் கூட எழத்தான் செய்கிறது .                                                      கோபத்திலும் நாம் இருவர் புரியும் நெகிழ்ச்சியில் சமாதானமடைய தோன்றும் மனம் .ஒவ்வாரு முறையும் உன்னுடன் நான் கோவிக்கையில் , ஈகோ இல்லாமல் விட்டுக்கொடுக்கும் நட்பு அமைவது அரிதெனினும் அது உன்னுருவில் கிடைக்க தவம் செய்திருக்க வேண்டும் நானும். நட்பைத்தாண்டி உறவாய் இப்பந்தம் வளர வாய்ப்பை நல்கி காத்துக்கிட...

கனியானவள்

முதிர்ந்த இலைகளும் , வாடிய பூக்களின் இதழ்களும் காம்பிலிருந்து உதிர்வதை போல , உதிர்த்தாய் உன் வெட்கத்தை .பல கண்களும் பத்தாது உன் வெட்கத்தை காண , கண்டால் செயலிழக்கும் அவை அத்தனையும். மாற்றோரின் மணவாளனுக்கும் மனம் சற்றே தடுமாறும் உன்னை கண்ட அந்த நொடியினில். இல்லறத்தில் சிறந்தோரும் ஒரு கணம் தன்னிலை மறந்து வியப்பினில் ஆழ்வர் , உனது அழகின் செருக்கினில் .         கவிதையின் மொத்த உருவாய் நிற்கிறாய் நீ , வரிகளை தேடி நானும் அலைகின்றேன் உன்  இடையினில் , கண்டதை எழுதவும் தெரியாமல் தவிக்கின்றேன் . நீ சூடும் அணிகலன்கள் யாவும் அத்திப்பூவை போல , இருந்தும் இல்லாமலும் தெரிந்தும் தெரியாமலும் அழகை சேர்க்கிறது அவை உனக்கு . மரத்தின் இலையுதிர் காலத்தை காண பறந்து வரும் பறவை போல , பல மயில் கடந்து வரத்துடிக்கிறேன் உனை முழுவதுமாய் பார்க்க.       இல்லறம் எனும் நல்லறம் சிறக்க நீ வேண்டும் எனக்கு துணையாய் கிடைத்தால் , கிடைத்தால் ............!!! , உனைப்போல நூறு குழந்தைகளை பெற வேண்டுவேன் இறைவனிடம் . தாமரை போன்ற முகத்தில் கோவைப்பழ உதடுகள் குங்குமச்சிமிழ்களாய் சிரிக்க, சிற்பியி...

நட்பென்றால் நாம் என்போம்

தொப்புள் கொடி உறவல்ல இது கடைசிவரை உறவெனும் வலையில் சிக்கி தவிக்க ,தாலி கொடியின் உறவல்ல இது இல்லறம் எனும் சுகத்தை பெற, அனால் ஒன்று நிச்சயம் இதில் இல்லா சுகத்தை பெற முடியும் நாம் நம் நட்பெனும் உறவில்.

பயணம்

தேன்கிண்ணம் அமுதாய் சுரக்க ,வழியும் துளிகள் ஒவ்வொன்றும் உயிர்துளிகளாய் என்னுள் கரைய  .அருஞ்சுவையும் கலந்த அமுதாய் நீ எனக்கு .கரைந்து கரை சேர்ந்தேன் அன்பெனும் கடலில் நான் .... சுவைக்கும் துளிகள் ஒவ்வொன்றும் சொர்கமாய் திரள ,கண் இமை நீங்க உந்தன் விழி வழியே எந்தன் உயிர் இவ்வுலகை காண என்ன தவம் செய்தேனோ எனக்காக நீ வருவாயென .காலங்கள் மெல்ல உருண்டோட காத்திருக்கிறேன் என் உயிரை காண உன் உருவில் . எண்ணங்கள் ஒரு சேர இணையும் வாழ்வில் தோன்றும் புதிதாய் ஓர் பந்தம் அது வாழ்வில் சிறக்க ,உன்னுடன் இணைந்த பயணத்தில்  என்றும் ஓர் தோழனாய்  உன்னுள் நானிருப்பேன் என் தோழியே என்றும் உன் காதலனாய் .                                                                                                                   ...