தனிமை
தனிமையின் சுகம் தனிமைக்கே தெரிந்த ஒன்று கேட்டுப்பார் தனிமையில் வழ்பவனிடம் தெரியும் அதன் சுகம் எது தனிமை ?? வாழ்வில் நீ உன்னுடன் பேச கிடக்கும் தருணங்கள் தனிமை தனித்து இருப்பது தனிமை அல்ல . உறவின் பிரிவால் கிடைப்பது தனிமை அல்ல உறவின் பிரிவை உணர்த்தும் சோகம் தனிமைக்குடையது . ஏன் என்று கேட்டால் உன் மனம் சொல்லும் நீ உனக்காக வாழும் நிமிடங்கள் உன்னதமானவை அதை பிறரிடம் பகிர இயலா ஒன்று அதுவே தனிமை என . நீ என் செய்கிறாய் ஏன் செய்கிறாய் எதற்கு செய்கிறாய் என உனக்குள் அறிவுரை வழங்குவது தனிமை. தனிமையில் சிந்தித்து பார் வாழ்வின் அர்த்தம் புரியும் உனக்கு . மனம் எனும் வனத்தில் தியானம் செய்ய கிடைக்கும் நேரமே தனிமை . உண்மையான நண்பனை நீ தனிமை...