என்னுள் அவள்
யார் யாரென தெரிந்தும் , தெரியாமல் பல நாட்கள் கடந்தோடின உன்னைக்கண்டும் காணாமல் நான். உறவின் பிணைப்பினால் உருவான புதிய உறவின் பெயர் கூடத்தெரியாமல் நான் . முதல் சந்திப்பில் பேச முயன்றும் முடியாமல் , மறுசந்திப்பிற்க்காக தாயின் வருகைக்கு கண் மூடாமல் காத்துக்கிடக்கும் குழந்தை போல காந்திருந்தேன் நானும் . இயற்கையாய் அமைந்த ஒரு வாய்ப்பு இன்று நம்மிடம் இருக்கும் நட்பிற்கு விதையாய் . இலேசாய் தொடங்கிய அரட்டைகள் ஊற்று நீர் போல இன்றும் தொடர, நம் நட்பிற்கு (அன்பிற்கு ) காதலும் இணையாகுமோ என்ற எண்ணம் கூட எழத்தான் செய்கிறது .
கோபத்திலும் நாம் இருவர் புரியும் நெகிழ்ச்சியில் சமாதானமடைய தோன்றும் மனம் .ஒவ்வாரு முறையும் உன்னுடன் நான் கோவிக்கையில் , ஈகோ இல்லாமல் விட்டுக்கொடுக்கும் நட்பு அமைவது அரிதெனினும் அது உன்னுருவில் கிடைக்க தவம் செய்திருக்க வேண்டும் நானும். நட்பைத்தாண்டி உறவாய் இப்பந்தம் வளர வாய்ப்பை நல்கி காத்துக்கிடக்கிறேன் என்றும் உன் மகிழ்ச்சியில் இன்பம் காணும் உறவாய் ,உயிராய் .
இப்படிக்கு ,
உன் நிழல்

Comments
Post a Comment