தொப்புள் கொடி உறவல்ல இது கடைசிவரை உறவெனும் வலையில் சிக்கி தவிக்க ,தாலி கொடியின் உறவல்ல இது இல்லறம் எனும் சுகத்தை பெற, அனால் ஒன்று நிச்சயம் இதில் இல்லா சுகத்தை பெற முடியும் நாம் நம் நட்பெனும் உறவில்.
குழந்தையின் அழகை சொல்ல வார்த்தை ஏது இவ்வுலகில் .மன அமைதி தேடுவோர்கள் வந்து பாருங்கள் அந்த பச்சிளம் குழந்தையின் அர்த்தமில்லா சிரிப்பை ,பளிங்கு போன்ற பற்களை ,சின்னசிரிய நகங்களை மறந்து போவீர்கள் நீங்கள் கொண்ட துக்கத்தை .கன்னக்குழிகள் ஏனோ அவ்வளவு அழகு. பார்த்தவுடன் தழுவி அனைத்து முத்தமிட தோன்றும் . குறும்பு தனமான செயல்களும் ,அழகிய நாவும் நமக்கு நினைவூட்டும் கடவுளை நமக்குள் .பேருந்தின் அசைவுக்கேற்ப உடலசைவு . ஏனோ அந்த சத்தம் இசையாய் மாரியன போலும் அக்குழந்தைக்கு . கவலை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத பருவம் ஆம் என் தெரிய வேண்டும் .தெரிந்தால் அவளின் புன்னைகை புன் அகைத்து விடும் அதனிடம்.கடைசியில் இதை எழுதி முடிக்கையில் எனக்கு...
தடுமாறும் தருணங்கள் வாழ்வில் பல தத்துவத்தை கற்பிக்கும். உடன் தேறியவர்கள் ஆகிறார்கள் ஆசிரியர்களாக அத்துறையில் பின் வருபவர்களுக்கு . கற்கும் திறனும் கற்பிக்கும் திறனும் அனைவரிடமும் இல்லாது அது கொண்டவர்களோ நிற்கிரார்கள் வரிசையில் வாய்பிற்காக . ஏனோ கல்வி என்பது சந்தையில் விற்கும் பொருளாயிற்று அதை வாங்கவோ எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி அடகு கடையில் உறங்குகிறது தாயின் தாலிக்கொடி . கற்று தேர்ந்தவனோ மீட்கிறான் தாயின் உறவான தாலிக்கொடியை மற்றவனோ வைக்கிறான் மனைவயின் தாலி கொடியை தன் மக்கள் படிப்பிற்காக அடகு கடையில் . கல்வி என்பது சந்தையில் விற்கும் பொருளா என்ன ? இல்லையே அனைவருக்கும் கிடைக்கவேண்டுமேனவே பாடுபட்டார்கள் நம் தலைவர்கள் . இந்நிலை மாற சற்று சிந்தியுங்கள் மக்களே இனிமேலாவது அந்நிய சக்திகளை ஒழிப்போம் ஒன்றுபடுவோம் அனைவருக்கும் கல்வி என . ...
Comments
Post a Comment