Posts

Showing posts from December, 2016

என்னுள் அவள்

யார் யாரென தெரிந்தும் , தெரியாமல் பல நாட்கள் கடந்தோடின உன்னைக்கண்டும் காணாமல் நான். உறவின் பிணைப்பினால் உருவான புதிய உறவின் பெயர் கூடத்தெரியாமல் நான் . முதல் சந்திப்பில் பேச முயன்றும் முடியாமல் , மறுசந்திப்பிற்க்காக தாயின் வருகைக்கு கண் மூடாமல் காத்துக்கிடக்கும் குழந்தை போல காந்திருந்தேன் நானும் . இயற்கையாய் அமைந்த ஒரு வாய்ப்பு இன்று நம்மிடம் இருக்கும் நட்பிற்கு விதையாய் . இலேசாய் தொடங்கிய அரட்டைகள் ஊற்று நீர் போல இன்றும் தொடர, நம் நட்பிற்கு (அன்பிற்கு ) காதலும் இணையாகுமோ என்ற எண்ணம் கூட எழத்தான் செய்கிறது .                                                      கோபத்திலும் நாம் இருவர் புரியும் நெகிழ்ச்சியில் சமாதானமடைய தோன்றும் மனம் .ஒவ்வாரு முறையும் உன்னுடன் நான் கோவிக்கையில் , ஈகோ இல்லாமல் விட்டுக்கொடுக்கும் நட்பு அமைவது அரிதெனினும் அது உன்னுருவில் கிடைக்க தவம் செய்திருக்க வேண்டும் நானும். நட்பைத்தாண்டி உறவாய் இப்பந்தம் வளர வாய்ப்பை நல்கி காத்துக்கிட...

கனியானவள்

முதிர்ந்த இலைகளும் , வாடிய பூக்களின் இதழ்களும் காம்பிலிருந்து உதிர்வதை போல , உதிர்த்தாய் உன் வெட்கத்தை .பல கண்களும் பத்தாது உன் வெட்கத்தை காண , கண்டால் செயலிழக்கும் அவை அத்தனையும். மாற்றோரின் மணவாளனுக்கும் மனம் சற்றே தடுமாறும் உன்னை கண்ட அந்த நொடியினில். இல்லறத்தில் சிறந்தோரும் ஒரு கணம் தன்னிலை மறந்து வியப்பினில் ஆழ்வர் , உனது அழகின் செருக்கினில் .         கவிதையின் மொத்த உருவாய் நிற்கிறாய் நீ , வரிகளை தேடி நானும் அலைகின்றேன் உன்  இடையினில் , கண்டதை எழுதவும் தெரியாமல் தவிக்கின்றேன் . நீ சூடும் அணிகலன்கள் யாவும் அத்திப்பூவை போல , இருந்தும் இல்லாமலும் தெரிந்தும் தெரியாமலும் அழகை சேர்க்கிறது அவை உனக்கு . மரத்தின் இலையுதிர் காலத்தை காண பறந்து வரும் பறவை போல , பல மயில் கடந்து வரத்துடிக்கிறேன் உனை முழுவதுமாய் பார்க்க.       இல்லறம் எனும் நல்லறம் சிறக்க நீ வேண்டும் எனக்கு துணையாய் கிடைத்தால் , கிடைத்தால் ............!!! , உனைப்போல நூறு குழந்தைகளை பெற வேண்டுவேன் இறைவனிடம் . தாமரை போன்ற முகத்தில் கோவைப்பழ உதடுகள் குங்குமச்சிமிழ்களாய் சிரிக்க, சிற்பியி...