Posts

Showing posts from October, 2015

காதலன்

அருகில் இருக்கும் போது தெரியவில்லை அவள் காதலியா அல்லது  தோழியா  என்று , அனால் என்னவோ என் காதலை நானும் சொல்லவில்லை அவள் என் அருகில் இருந்தபோது . எங்கோ ஒரு நிகழ்வு நேரும்போது அவள் நினைவலைகள் தூண்டும் நம்முள் காதலை இப்போது விழைகிறேன் சொல்வதற்கு அவளோ இல்லை என் அருகில் .                                                                                                                       - ஒரு காதலன் 

கவிதை

மனிதன் எதை கவிதை என்கிறான் ? கவிதையே எதைபற்றி சொல்லும் கவிதை என ? இயற்கையின் எழில்மிகு  அழகையா அல்லது மரத்தின் பூவையா , கனியான கனியையா இல்லை மருத்துவம் மிகுந்த இலையையா .  தனது தாயை கவிதை என்கிறான் குழந்தை பருவத்தில் , வளரும் பருவமாய் இருக்கையில் தந்தை அவனது கவிதை என்கிறான் .பல உருவங்களை கொண்ட இளம்பருவத்திலோ தனது காதலியையும் கவிதை என்கிறான் கனவுலகில் . கனவு தெளிகையில் தனது மனைவி கவிதையாய் தெரிகிறாள் அவனுக்கு . எது கவிதை ? இவை அனைத்தும் கவிதையே பார்க்கும் நேரமும் கண்களுமே வேறு . அழகை ரசிக்கத்தெரிந்தவன் ரசிகன் ஆகிறான் , அழகை வர்ணிக்க தெரிந்தவன் கவிஞன் ஆகிறான் . பெண்ணினமே ஒரு கவிதை என்றார்கள் கவிஞர் பலர். அனால் இன்றோ அக்கவிதை கசக்கி எறியப்படுகிறது ஒரு இலையை போல . வளர்ந்தேன் , வளர்கிறேன் ,வளர்வேன் என்றும் கவிதையை ரசிக்கவும் , வர்ணிக்கவும் தெரிந்த ஒரு தமிழ் கவிஞனாய் . கவிதை கடைசியில் முடிகிறது பெண்ணிடம் ஆரம்பித்ததோ இயற்கை எனும் எனும் பெண்ணிடமே ..                                   ...

விதி

விதியை தலைவிதி என ஏற்போர் வாழ்கையில் சதி நிரம்பி வழியும் என கூறுவர் . விதியை வெல்ல எமனாலும் முடியாது என்பர் ஏன் ? யார் விதியை நிர்ணயிப்பது நீயா , நானா அல்லது கடவுளா ? கடவுளுக்கே விதியுண்டு என்பர் சிலர் . எனில் விதி என்பதை எழுதுபவர்தான் யாரோ ? நண்பா நன்றாக யோசித்துபார் உனக்கே புரியும் . விதியை மதியால் வெல்லலாம் என்பர் சிலர் . மதி என்பது மனிதன் செய்யும் காரியங்கள் ஆகும் . உன் தலைவிதியை என்று நீ எழுதுகிறாயோ அன்றே உன் வாழ்கை புனிதமாகிறது .                                              வாழும் காலம் வரை விதியை நினைத்து அதை வெல்ல மனம் போராடி முடிக்கையில் வாழ்கை முடிகிறது அவனுக்கு . எனில் பூமியில் நீ வாழும் ஒவ்வொரு நிமிடமும் உனது ,உனக்கானது ,உனக்காக நீ எழுதிய சகாப்தம் என நினைப்பாய் ,நினைத்தால் வெற்றி உனக்கே . மனிதனை வெல்ல இவ்வுலகில் எவரும் உண்டோ ? உண்டு என்றால் அவரையும் அழையுங்கள் பார்ப்போம் எவர் பெரியவர் என .        அனால் ஒன்று நிச்சியம் கடைசியில் கடவுளை நம்...