Posts

Showing posts from July, 2015

வாழ்கை

 எவருக்கு இல்லை வாழ்வு இவ்வுலகில் ? மரம் ,தண்ணீர் ,காற்று ,விலங்கு ,மனிதன் அனைவருக்கும் உண்டோ வாழ்கை இறைவன் படைப்பில் . மனிதனோ தான் வாழ மற்றவைகளை மடிப்பது சாதாரணமாயிற்று ,என் இந்த நிலை கேட்டுப்பார் மனிதா ? உனக்குள் தோன்றும் விடை அதற்கு .கால மாற்றங்கள் இயற்கையால் ஏற்படும் சதி எனவும் கூறலாம் அமாம் சதிதான் அனால் , நாம் பபுரிவது  சதி இயற்கைக்கு அது திரும்ப செய்தால் அதை மனிதன் விதி என்கிறான் .நியுட்டனின் மூன்றாம் விதிக்கேற்ப புரிந்து செயல்பட்டால் வாழ்கை இன்பமே உனக்கு >>>!!!!!!!!!!!!!!!!!                                                                                                                          ப.சக...

வலி கல்வி

தடுமாறும் தருணங்கள் வாழ்வில் பல தத்துவத்தை கற்பிக்கும். உடன் தேறியவர்கள் ஆகிறார்கள் ஆசிரியர்களாக அத்துறையில் பின் வருபவர்களுக்கு . கற்கும் திறனும் கற்பிக்கும் திறனும் அனைவரிடமும் இல்லாது அது கொண்டவர்களோ நிற்கிரார்கள் வரிசையில் வாய்பிற்காக . ஏனோ கல்வி என்பது சந்தையில் விற்கும் பொருளாயிற்று அதை வாங்கவோ எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி அடகு கடையில் உறங்குகிறது தாயின் தாலிக்கொடி . கற்று தேர்ந்தவனோ மீட்கிறான் தாயின் உறவான தாலிக்கொடியை  மற்றவனோ வைக்கிறான் மனைவயின் தாலி கொடியை தன் மக்கள் படிப்பிற்காக அடகு கடையில் . கல்வி என்பது சந்தையில் விற்கும் பொருளா என்ன ? இல்லையே அனைவருக்கும் கிடைக்கவேண்டுமேனவே பாடுபட்டார்கள் நம் தலைவர்கள் . இந்நிலை மாற சற்று சிந்தியுங்கள் மக்களே இனிமேலாவது அந்நிய சக்திகளை ஒழிப்போம் ஒன்றுபடுவோம் அனைவருக்கும் கல்வி என .                                                               ...