கனியானவள்
முதிர்ந்த இலைகளும் , வாடிய பூக்களின் இதழ்களும் காம்பிலிருந்து உதிர்வதை போல , உதிர்த்தாய் உன் வெட்கத்தை .பல கண்களும் பத்தாது உன் வெட்கத்தை காண , கண்டால் செயலிழக்கும் அவை அத்தனையும். மாற்றோரின் மணவாளனுக்கும் மனம் சற்றே தடுமாறும் உன்னை கண்ட அந்த நொடியினில். இல்லறத்தில் சிறந்தோரும் ஒரு கணம் தன்னிலை மறந்து வியப்பினில் ஆழ்வர் , உனது அழகின் செருக்கினில் .
கவிதையின் மொத்த உருவாய் நிற்கிறாய் நீ , வரிகளை தேடி நானும் அலைகின்றேன் உன் இடையினில் , கண்டதை எழுதவும் தெரியாமல் தவிக்கின்றேன் . நீ சூடும் அணிகலன்கள் யாவும் அத்திப்பூவை போல , இருந்தும் இல்லாமலும் தெரிந்தும் தெரியாமலும் அழகை சேர்க்கிறது அவை உனக்கு . மரத்தின் இலையுதிர் காலத்தை காண பறந்து வரும் பறவை போல , பல மயில் கடந்து வரத்துடிக்கிறேன் உனை முழுவதுமாய் பார்க்க.
இல்லறம் எனும் நல்லறம் சிறக்க நீ வேண்டும் எனக்கு துணையாய் கிடைத்தால் , கிடைத்தால் ............!!! , உனைப்போல நூறு குழந்தைகளை பெற வேண்டுவேன் இறைவனிடம் . தாமரை போன்ற முகத்தில் கோவைப்பழ உதடுகள் குங்குமச்சிமிழ்களாய் சிரிக்க, சிற்பியில் புதைந்த முத்தாய் அவளது பற்கள் . அவற்றிற்க்கு மெருகூட்ட இணையாய் அந்த கன்னக்குழிகள் , சூரியனைப்பார்த்த காந்திப்பூவை நினைவூட்டின . இவை அனைத்தும் எனது கற்பனைகளின் வெளிப்பாடாய் உனக்கு நான் அனுப்பும் மடலாய் ஓர் காதல் கவிதை .......................................................
இப்படிக்கு ,
உன் காதலன்

Comments
Post a Comment