பயணம்

தேன்கிண்ணம் அமுதாய் சுரக்க ,வழியும் துளிகள் ஒவ்வொன்றும் உயிர்துளிகளாய் என்னுள் கரைய  .அருஞ்சுவையும் கலந்த அமுதாய் நீ எனக்கு .கரைந்து கரை சேர்ந்தேன் அன்பெனும் கடலில் நான் ....

சுவைக்கும் துளிகள் ஒவ்வொன்றும் சொர்கமாய் திரள ,கண் இமை நீங்க உந்தன் விழி வழியே எந்தன் உயிர் இவ்வுலகை காண என்ன தவம் செய்தேனோ எனக்காக நீ வருவாயென .காலங்கள் மெல்ல உருண்டோட காத்திருக்கிறேன் என் உயிரை காண உன் உருவில் .

எண்ணங்கள் ஒரு சேர இணையும் வாழ்வில் தோன்றும் புதிதாய் ஓர் பந்தம் அது வாழ்வில் சிறக்க ,உன்னுடன் இணைந்த பயணத்தில்  என்றும் ஓர் தோழனாய்  உன்னுள் நானிருப்பேன் என் தோழியே என்றும் உன் காதலனாய் .
                                                                                                                                                                                                                                                                                           ப.சக்திவேல்

Comments

Popular posts from this blog

மோகம்

அல்லி மெட்டு

வலி கல்வி