வலி கல்வி

தடுமாறும் தருணங்கள் வாழ்வில் பல தத்துவத்தை கற்பிக்கும். உடன் தேறியவர்கள் ஆகிறார்கள் ஆசிரியர்களாக அத்துறையில் பின் வருபவர்களுக்கு . கற்கும் திறனும் கற்பிக்கும் திறனும் அனைவரிடமும் இல்லாது அது கொண்டவர்களோ நிற்கிரார்கள் வரிசையில் வாய்பிற்காக .

ஏனோ கல்வி என்பது சந்தையில் விற்கும் பொருளாயிற்று அதை வாங்கவோ எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி அடகு கடையில் உறங்குகிறது தாயின் தாலிக்கொடி . கற்று தேர்ந்தவனோ மீட்கிறான் தாயின் உறவான தாலிக்கொடியை  மற்றவனோ வைக்கிறான் மனைவயின் தாலி கொடியை தன் மக்கள் படிப்பிற்காக அடகு கடையில் .

கல்வி என்பது சந்தையில் விற்கும் பொருளா என்ன ? இல்லையே அனைவருக்கும் கிடைக்கவேண்டுமேனவே பாடுபட்டார்கள் நம் தலைவர்கள் . இந்நிலை மாற சற்று சிந்தியுங்கள் மக்களே இனிமேலாவது அந்நிய சக்திகளை ஒழிப்போம் ஒன்றுபடுவோம் அனைவருக்கும் கல்வி என .

                                                                                                                ப.சக்திவேல் 

Comments

Popular posts from this blog

மோகம்

அல்லி மெட்டு