கவிதை

மனிதன் எதை கவிதை என்கிறான் ? கவிதையே எதைபற்றி சொல்லும் கவிதை என ? இயற்கையின் எழில்மிகு  அழகையா அல்லது மரத்தின் பூவையா , கனியான கனியையா இல்லை மருத்துவம் மிகுந்த இலையையா .

 தனது தாயை கவிதை என்கிறான் குழந்தை பருவத்தில் , வளரும் பருவமாய் இருக்கையில் தந்தை அவனது கவிதை என்கிறான் .பல உருவங்களை கொண்ட இளம்பருவத்திலோ தனது காதலியையும் கவிதை என்கிறான் கனவுலகில் . கனவு தெளிகையில் தனது மனைவி கவிதையாய் தெரிகிறாள் அவனுக்கு .

எது கவிதை ? இவை அனைத்தும் கவிதையே பார்க்கும் நேரமும் கண்களுமே வேறு . அழகை ரசிக்கத்தெரிந்தவன் ரசிகன் ஆகிறான் , அழகை வர்ணிக்க தெரிந்தவன் கவிஞன் ஆகிறான் . பெண்ணினமே ஒரு கவிதை என்றார்கள் கவிஞர் பலர். அனால் இன்றோ அக்கவிதை கசக்கி எறியப்படுகிறது ஒரு இலையை போல . வளர்ந்தேன் , வளர்கிறேன் ,வளர்வேன் என்றும் கவிதையை ரசிக்கவும் , வர்ணிக்கவும் தெரிந்த ஒரு தமிழ் கவிஞனாய் . கவிதை கடைசியில் முடிகிறது பெண்ணிடம் ஆரம்பித்ததோ இயற்கை எனும் எனும் பெண்ணிடமே ..
                                                                                                            ப.சக்திவேல்

Comments

Popular posts from this blog

மோகம்

அல்லி மெட்டு

வலி கல்வி