கனவு காதல்

பழகியது சிறு காலமாயினும் நினைவுகள் ஏனோ பனிமலையாய் என்னுள் .கண்களை மூடியும் கலையா கனவாய் என்னுள் கரைகிறாய் நீ .ஆண்களின் மனதோ பூவைவிட மென்மையானது , ஸ்பரிசிதவர்க்கு மட்டுமே தெரியும் உண்மை அது . நீ என்னுடன் இருந்த நிமிடங்களை பூக்களுக்கு கிடைக்கும் தென்றலாய் உணர்ந்தேன் உன் சுவாசத்தில்.
                                  பெண்ணே நீ சட்டென மறந்து சென்றாய் எனைபிரிந்து வெகுதூரத்தில் .மறக்கவும் முடியாமல் ,மறக்கவும் தெரியாமல் தவிப்பின் உச்சத்தில் நான் .ஒன்று மட்டும் நிச்சயம் நானிருக்கும் வரை இருக்கும் உன் நினைவுகள் என்னோடு .எங்கு சென்றாலும் என்னுள் வாழ்வாய் என்றும் ஒரு தோழியாய் . காதலையும் வெறுக்க துணிந்தேனடி ஏனோ காதலை பிடிக்காமல் அல்ல , இன்னொருத்தியை நினைக்க முடியாமல் நீ இருந்த இடத்தில் . என்றும் உன் நினைவோடு வாழும் தோழனாய் நிஜத்தில் யாரோ என .

                                                                                                                                      ப.சக்திவேல்  

Comments

Popular posts from this blog

மோகம்

அல்லி மெட்டு

வலி கல்வி