என் காதல்

விடியலில் கண்விழிக்க தவிர்க்கிறேன் உன்னை காண்பது நின்றுவிடுமே என் கனவில் என .காதலில் விழுந்தேன் உன்னை கண்ட மறு நொடியில் நான் ஏனோ மனம் மறுக்கிறது உன்னிடம் கூற . நீ என்னருகில் அமர்ந்த  நிமிடங்கள் பொற்காலமாய் மாறின ஆனால் எதிர்பாராமல் அது வகுப்பறைகலாயின . உன் சுவாசம் நன் அறிவேன் அவ்வளவு நெருக்கம் உன்னுடன் எனக்கு இதை அறிவாயா பெண்ணே நீ . நீண்ட நேரம் தூங்குவது பிடிக்கும் எனக்கு ஏனெனில் அது நான் என் கனவில் உன்னுடன் புரியும் புரிதல்கள் .
                                                                                   உனது தேகம் பற்றினேன் உயிராய் ,உறவாய் உன்னுடன் வாழ .சட்டனெ பிரிந்தாய் (பெயர்ந்தாய் என்றும் சொல்லலாம் ) ஏனோ என் மனம் கேட்கவில்லை நீ பிரிந்து செல்வதை தொடர்ந்தேன் பின்னால் . காணமல் கண்டேன் உன்னை ,கண்டு ரசித்தேன் என் கனவில் . கடவுளுக்கு நன்றி உன்னை என் கண்ணில் காட்டியதற்காக .இப்போதோ அதே கடவுளை திட்டவும் தோனுகிறது என்னிடம் இருந்து உன்னை பிரித்ததற்காக .
                                                  தினமும் வாழ்கிறேன் கனவில் உன்னுடன் அன்பே எனக்கொரு வாய்ப்பளிப்பாய உன்னுடன் நிஜத்தில் வாழ என்றும் உன் உயிராய் .கூறித்தான் ஆக வேண்டும் ஏதோ ஒன்று தடுக்கிறது என்னை உன்னிடம் என் காதலை சொல்ல விடாமல் எப்போது அறிவேன் . உனை காண மனம் விழைகிறது .
                                        உன் பெண்மையை போற்றி பாட பலநூறு கவிதை எழுதுவேன் நீ என்னுடன் இருந்தால் ,இருப்பாயா ??? . எனக்கும் புரியவில்லை நான் ஏன்  உன்னை நினைத்து இதை எழுதுகிறேன் என்று அதுவும் நடு இரவில் .தூக்கம் தொலைந்தன தேடுகிறேன் நான் தொலைத்ததை மறுபடியும் என்று காண்பேனோ என்ற ஆனந்தத்தில் .என்னுடன் வருவாயா நீ துணையாக அல்ல வாழ்கை துணையாக

                                                                     ஒரு காதலன்

Comments

Popular posts from this blog

மோகம்

அல்லி மெட்டு

வலி கல்வி