உலகின் முதற்கவிதை : அம்மா
மூன்றெழுத்தால் மூஉலகையும் ஆளும் சக்தி அவள் .கன்னி மை நீங்க தாயிற்கண் சேர புதிய பிறப்புண்டு அவளுக்கு . ஆயிரம் யானைகளின் சக்தி கொண்டவள் அவள் . மகப்பேரால் தன் இரத்தம் கொடுத்து அதன் சக்தியை குழந்தையாய் அளிக்கிறாள் உலகிற்கு . பாசத்தின் உச்சம் அவள் ,தன் மக்களை என்றும் துச்சமென நினைக்கதவள் அவள் . தன் மக்களுக்கு உலகில் ஒளியாய் ,வழியாய் விளங்குபவள் .
உலகில் அடுத்தவர் வாழ்வதை கண்டு மனதளவில் அனந்தம் கொள்ளும் ஒரே ஜீவன் . தாய்பாசம் உலகில் உள்ள அனைத்து ஜீவனுக்கும் உண்டு அதை மக்கள் அறிவர் .ஏனோ நண்பா உன் தாயையும் என் தாயாக ஏற்றேன் அவளும் தாய் என்பதால் . மனம் பதைக்கிறது வேறு உன் உறவுகளை என் உறவாய் ஏற்க . ஜீவனை உலகிற்கு தருபவள் அவளே ,மூன்றெழுத்து கவிதை அவளே அம்மா .
அம்மா என்று சொல்லிப்பார் அதை விட கவிதை வேறில்லை மூன்றெழுத்தில் .......>> அம்மா அம்மா அம்மா
ப.சக்திவேல்
Comments
Post a Comment